08.01.2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் அத்துமீறி புகுந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்தி பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் வன்மையாக கண்டித்துள்ளார்.
தாக்குதல்தாரி அலுவலகத்திற்குள் புகுந்து, அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதுடன் கத்தியால் குத்தி கொலை செய்யவும் முற்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும். இத் தாக்குதல் திட்டமிட்ட செயலாகவே காணப்படுகின்றது.
சம்பவத்தின் பின்னணிகள் குறித்து முழுமையான விசாரணைகள் செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்று வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறியுள்ளார்.