முகத்துவாரம் கலப்பில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

6304 6

மட்டக்களப்பு நாவலடி புதிய முகத்துவாரம் கலப்பு பகுதியல் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கலப்பு கரைப்பகுதியில் சடலம் ஒன்று நீரில் மிதப்பதாக, அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து குறித்த பகுதிக்கு பொலிசார் சென்று அடையாளம் காணப்படாத சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் முதியவர் எனவும் அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரியுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a comment