பிணை முறி ஆணைக்குழு அறிக்கை 17ம் திகதி சபைக்கு

268 0

பிணைமுறி சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் இதுதொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் எழுத்துமூலம் அறிவித்திருப்பதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த விவகாரம் தொடர்பில் இன்று விசேட பாராளுமன்ற அமர்வு கூட்டப்பட்டது. இதன்போதே பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார்.

இதேவேளை, இந்த போது குறித்த விவகாரம் தொடர்பாக பிரதமர் விசேட உரையொன்றையும் நிகழ்த்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மத்தியில் வந்து ஆர்ப்பாட்டம் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment