ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு

256 0

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களா? அல்லது 6 வருடங்களா? என ஆராய்ந்து பார்க்க 5 பேர்கொண்ட நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியஸாத் டெப், அவரும் உள்ளடங்கலாக இந்த நீதிபதிகள் குழுவை நியமித்துள்ளார்.

இந்த குழுவில் நீதியரசர் ஈவா வணசுந்தர, புவனேக அலுவிஹார, கே.டி. சித்ரசிறி மற்றும் சிசிர டி. ஆப்ரூ ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment