‘Wolbachla’ எனும் பற்றீரியாவின் மூலம் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான நியம வேலைத்திட்டமொன்றை அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் செயற்படுத்துவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக ‘Wolbachla’ எனும் பற்றீரியாவினை பயன்படுத்துவதன் சாதக தன்மை தொடர்பில் அவுஸ்திரேலியாவின் மொனேஸ் பல்கலைக்கழகம் வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்முறை தொடர்பில் அவுஸ்திரேலியா, வியட்நாம், இந்துனேஷியா, பிரேசில் மற்றும் கொலொம்பியா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வெற்றியும் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.