சட்டசபையில் இன்று ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்துக்கு சக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்துக்கு சக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்திற்கு மத்தியில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசப்படுகின்றன.
அப்போது, கேள்வி ஒன்றுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். அவரது பதிலில் திருப்தி இல்லை என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார். அப்போது அவருக்கு சக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.