2021வரை பதவியில் நீடிக்க ஜனாதிபதி திட்டம்?

245 0

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக பதவியில் நீடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் சட்ட விளக்கம் கோரியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்று முழுதாக இல்லாதொழிக்கப் போவதாக வாக்குறுதி அளித்தே ஜனாதிபதி மைத்திரி சிறிசேன நல்லாட்சியினை அமைத்திருந்தார்.

எனினும், 19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரையிலேயே பதவியில் நீடிக்க முடியும்.

தனது பதவிக் காலத்தில் ஓராண்டை தியாகம் செய்துள்ளதாக முன்னதாக ஜனாதிபதி கூறியிருந்த நிலையில், தற்பொழுது ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட முடியுமா என்பது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி செயலகம் எழுத்து மூலம் உச்ச நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment