பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

234 0

பிணை முறி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன பிணை முறி அறிக்கையின் பிரதியொன்றை கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன மஹேந்திரன் கையொப்பமிட்ட நாணயத்தாள் செல்லுபடியற்றது எனவும், அது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கோரவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment