கடந்த ஆண்டு பாடசாலை மாணவர்களின் சீருடைகளுக்குாக வழங்கப்பட்ட வவுச்சரின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைய இருந்த குறித்த வவுச்சர்கள் மேலும் ஒரு மாத காலத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த வவுச்சர்கள் இம்மாதம் 30ம் திகதி வரை செல்லுபடியாகும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது