கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்தார்.
பாடசாலை பரீட்சார்த்திகள் இதற்கான விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தினால் தேசிய பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக விண்ணப்பங்களை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இதேவேளை, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பார்வையிடலாம்