மொழி உதவி அதிகாரிகளாக 1000 பேர் இவ்வருடத்தில் நியமனம் – மனோ கணேசன்

243 0

மொழி உதவி அதிகாரிகள் 1000 பேர் 6 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு அரச நிறுவனங்களில் இவ்வருடத்தில் நியமிக்கப்படுவார்கள் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை , பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் உள்ளிட்டவற்றிற்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டளவில் இவ்வாறான 3000 அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய பிரச்சினையை தீர்க்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவம் வழங்கிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகொள்கையை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், இதன் மூலம் தேசிய பிரச்சனையை 60 சதவீதம் தீர்க்க உதவியாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அனைத்து பிரச்சனைக்கும் தனது தாய் மொழியில் கடிதம் மூலமும் உரையாடல் மூலமும் செயற்பட சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment