ரவி கருணாநாயக்கவுக்கு அழைப்பாணை

245 0

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதான் துலானி அமரசிங்க அழைப்பாணை விடுத்துள்ளார்.

ரவி கருணாநாயக்க வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் விவகாரம் ஒன்று தொடர்பில் சாட்சியமளிக்கவே அவருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில், விலைப்பட்டியலுக்கு முரணாக 1000 மெட்ரிக் டொன் அரிசி விற்பனை செய்ய உத்தரவு பிறப்பித்ததன் மூலம் 4 மில்லியன் ரூபாய் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் அப்போதைய சதொச பொது முகாமையாளருக்கு எதிரான வழக்கில் சாட்சியமளிக்கவே ரவி கருணாநாயக்க  எதிர்வரும் மார்ச் 09ம் திகதி நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த அழைப்பாணையை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a comment