கடந்த சில மாதங்களாக மன்னார் அரச வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் காணப்படாததனால் தாம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவித்து அப்பிரதேச கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்தியசாலைக்கு முன்னால் பாதையை மறைத்து இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய அதிகாரி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். இவருக்குப் பதிலாக இதுவரை எவரும் வருகை தரவில்லையெனவும் இந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.
சில வைத்தியர்கள் வவுனியா அல்லது யாழ் அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு கர்ப்பிணித் தாய்மார்களிடம் கேட்டுக் கொள்கின்றனர். இந்த இடங்களுக்குச் செல்வதற்கு 60, 70 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளோம். இதனால் பாரிய சிரமத்தை தாம் எதிர்நோக்குவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.