உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கு 60 இலட்சத்து 536 பேர் தகுதி பெற்றிருப்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது. தபால் மூல வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் அரச ஊழியர்களின் பெயர்ப் பட்டியல் கடந்த திங்களன்றே மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் நாளை மறுதினம் (12) வினியோகிக்கப்படவுள்ளதாகவும் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறவுள்ளதாகவும் தேர்தல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.