கல்கமுவ பிரதேசத்தில் சுற்றித்திரிந்த தலபூட்டுவா என்று அறியப்பட்ட யானையின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 07 சந்தேகநபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மஹவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு சந்தேகநபர் மாத்திரம் பிணையில் விடுவிக்கப்பட்டார். தலபூட்டுவாவை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கின் 08வது பிரதிவாதியே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரசிக மல்லவராச்சி உத்தரவிட்டுள்ளார்.