இந்தியாவின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் பிராட்யூஷை புனேயில் உள்ள ஐ.ஐ.டி.எம் உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் ‘பிராட்யூஷை’ புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
உலகில் வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சி குறித்து ஆய்வு செய்ய பல சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ளன. அந்த வரிசையில் இது உலகின் 4 வது மிக வேகமான கம்ப்யூட்டராகும். இதன் மூலம் நாட்டின் பருவநிலை மாற்றம், சுனாமி, புயல், காற்றின் தரம், மின்னல், கடல் மீன்வளம், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற அனைத்தையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளமுடியும்.
400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த கம்ப்யூட்டரின் அறிமுக விழாவை மத்திய அறிவியல் துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் மிகத்தரமான கம்ப்யூட்டர் என அறிமுக விழாவில் ஹர்ஷ்வர்தன் கூறினார்.