குளவிக்கொட்டுக்கிலக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

279 0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  காட்டு மஸ்கெலியா தோட்டத்தில் நேற்று மாலை குளவிகளின் தாக்குதலுக்குள்ளாகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் திடீரென களைந்து தாக்கியுள்ளன.

பறவை ஒன்று தேன் குடிப்பதற்காக குளவி கூட்டினை தாக்கியதால் களைந்த குளவிகள் தொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில்  ஒரு பெண்ணும்,வாய் பேச முடியாத நபர் ஒருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment