சேவையிலிருந்து நீக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை மாகம்புற துறைமுகத்தின் ஊழியர்கள் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் சரியான தீர்வை பெற்றுத் தராமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகம்புற துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஐ.கே.ஒமேஷ் தெரிவித்துள்ளார்.
அதன்படி துறைமுகத்தின் 438 ஊழியர்கள் இன்று காலை முதல் பிரதான வாயிலுக்கு முன்னாள் போராட்டத்த்தில் ஈடுபடவுள்ளனர்.
மாகம்புற துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு முன்னர் குறித்த ஊழியர்கள் நவம்பர் 30ம் திகதி சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை அவர்களுக்கு எந்தவித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தமது பிள்ளைகளின் தொழிலுக்கு உத்தரவாதமளிக்குமாறு கோரி சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்களின் பெற்றோர் முன்னெடுக்கும் சத்தியாக்கிரகப் போர்ராட்டம் துறைமுகத்திற்கு முன்னாள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.