உணவு பொருட்களை பொதியிட பயன்படுத்தப்படும் பொலித்தீன் (லஞ்சீட்) மற்றும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பொலித்தீனின் விலையும் அதிகரித்துள்ள நிலையில் உணவு பொதியொன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் 20 மைக்கிரோனுக்கும் குறைவான பொலித்தீன் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கும் அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.