சட்டசபை கூட்டம் தொடங்கியது: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல்

214 0

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அரசின் திட்டங்களை பாராட்டிய ஆளுநர் பன்வரிலால் புரோகித் பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார். ஆளுநர் உரையை அடுத்து சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.

அப்போது, வரும் வெள்ளிக்கிழமை வரை அவை நடக்கும் என்றும், இறுதி நாளன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பேசுவார் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டசபையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஒக்கி புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் தீர்மானத்தை முன்மொழிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a comment