நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள், தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் அனைத்திலும் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்காகவும், கல்வியமைச்சினால் அறுமுகம் செய்யப்பட்ட ´சுரக்ஷா´ காப்புறுதித் திட்டத்தின் பிரதிபலனை பெற்றுக் கொள்ளும் அளவு அதிகரித்துள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 02 இலட்சம் ரூபா காப்புறுதி கிடைப்பதுடன், சுமார் 45 இலட்சம் மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கான ´சுரக்ஷா´ காப்புறுதித் திட்டத்தின் கீழ் எவரும் விரைவாக அனுகூலம் பெறக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதில் மருத்துவ காப்பீடு, வைத்தியசாலை வசதிகள் போன்றவையும் உள்ளடங்கும்.
´சுரக்ஷா´ காப்புறுதித் திட்டம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அனுகூலங்கள் கோரி இரண்டாயிரத்து 200ற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
2018 ஜனவரி முதலாம் திகதி வரை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தால் கல்வியமைச்சுக்கு கிடைக்கப் பெற்ற தரவுகளின் பிரகாரம், ´சுரக்ஷா´ காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபாவுக்கு மேலான தொகை அனுகூலங்களாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான ´சுரக்ஷா´ காப்புறுதித் திட்டத்தின் கீழ் எவரும் விரைவாக அனுகூலம் பெறக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.