எந்தவொரு கட்சியும் நிறத்துக்கு உரிமை கோர முடியாது- மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

285 0

குறித்ததொரு கட்சி குறிப்பிட்ட ஒரு நிறத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற எந்தவொரு வரையறையையும் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கவில்லையென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சில முக்கிய கட்சிகள் தமக்கென குறிப்பிட்ட நிறத்தை உரிமை கோருவது குறித்து வினவியபோதே டெய்லி சிலோனிடம் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு கூறினார்.

எந்தக் கட்சிக்கும் எந்தவொரு நிறத்தையும் பயன்படுத்த தடையில்லை. தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்சியின் பெயரும் சின்னமும் மாத்திரமே பதிவு செய்யப்படுகின்றது. கட்சிக்கென ஒரு நிறத்தை எந்தக் கட்சியும் ஆணைக்குழுவில் உத்தியோகபுர்வமாக பதிவதில்லையெனவும் அவர் விளக்கமளித்தார்.

Leave a comment