நாட்டில் பொரும்பாலான பகுதிகளில் தற்பொழுது நிலவும் வறட்சியும் குளிருமான காலநிலை நாளை (09) முதல் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் 75 மி.மீ. மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக் கூடும் எனவும் பெரும்பாலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை நேரத்தில் பனி அடர்ந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் இன்று (08) குறைந்த வெப்பநிலை நுவரெலிய மாவட்டத்தில் காணப்பட்டதாகவும், இது 4 பாகை செல்சியசாக உள்ளதாகவும், அதிகூடிய வெப்பநிலை இரத்தினபுரி மாவட்டத்தில் காணப்பட்டதாகவும் இது 32.7 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்டதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.