நேற்று குறித்த தோட்டப் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது, ஹட்டன் பொலிஸ் தலைமையக பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெமீல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிறுத்தை வரும் வேளையில் அதனை பயமுறுத்தும் வகையில் தோட்ட மக்கள் செயற்படுவதால், அதனை பிடிக்க வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு முடியாதுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே, சிறுத்தை வந்தால் அப் பகுதியில் இருந்து வௌியேறிவிட்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அது பற்றி தெரியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுத்தை செல்லப் பிராணிகளை வேட்டையாடுவதால், வேலைக்கு வருபவர்கள் தமது செல்லப் பிராணிகளை அழைத்து வருவதைத் தவிர்க்குமாறும் ஏ.எல்.எம்.ஜெமீல் தோட்டத் தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், ஏழாவது நாளாகவும் அந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சிக்காக, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், நாய் ஒன்றை பொறியில் வைத்த படி, அப் பகுதியில் தங்கியுள்ளனர்.