ஹெரோயின் வைத்திருந்த 23 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

244 0

ஹெரோயின் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த விடயம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, இளைஞர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

மேலும், புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 2013ம் ஆண்டு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது கைதானமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment