சீமான் ஒரு சுயநலவாதி – டுவிட்டரில் சாடுகிறார் நாமல் ராஜபக்ஷ

265 0

இலங்கை தமிழ் மக்களின் உரிமைக்காக சீமான் குரல் கொடுக்கவில்லை. மாறாக தனது சுயநல அரசியலை முன்னெடுத்துச் செல்லவே இலங்கை தமிழ் மக்கள் பற்றி பேசுகிறார் என” பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்ததற்கு நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தின் செய்தி தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாதத்தில் கடந்த 6ஆம் திகதி கலந்துகொண்டிருந்த சீமான், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சீமான் எழுப்பிய கேள்விக்கு நாமல் ராஜபக்ஷ, ட்விட்டரில் பதிலளித்துள்ளார். “இலங்கைத் தமிழர் விவகாரத்தை, சுய அரசியல் இலாபத்துக்காக மட்டுமே பயன்படுத்தும் சீமானுக்கு, இலங்கை தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இல்லை.” என்று குற்றச்சாட்டியுள்ளார்

Leave a comment