தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தளத்தின் பெயர் www.elections.gov.lk என்பதாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த தேர்தல் செயலகத்தின் அதாவது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் புத்தாண்டிலிருந்து இந்த பெயர்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக www.selection.gov.lk என்ற பெயருக்கு பதிலாக தற்பொழுது www.elections.gov.lk என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
முன்னைய பெயரிலான இணையத்தளத்தில் தொழில்நுட்ப சிரமங்கள் காணப்பட்டமையாலேயே புதிய உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.