பரிந்துரை படியே அம்பகமுவ பிரதேசசபை பிரிக்கப்பட்டது!

228 0
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தின் போது, அம்பகமுவ பிரதேசசபை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த நடவடிக்கை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே, மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இதன்போது சட்டமா அதிபர் தரப்பில் இருந்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தின் போது, அம்பகமுவ பிரதேசசபை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment