வடகொரியா தலைவருடன் நேரடியாக பேசத்தயார் – டிரம்ப் அறிவிப்பு

259 0

வடகொரியா தலைவருடன் நேரடியாக பேசத்தயார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பு நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்,

வடகொரியா தொடர்ந்து அணுக்குண்டுகளை வெடித்தும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகளை சோதித்தும் வருவது அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.

இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் மேரிலாந்து மாகாணத்தின் கேம்ப் டேவிட் என்ற இடத்தில் உள்ள ஜனாதிபதி ஓய்வு மாளிகையில் நேற்று முன்தினம் டிரம்ப் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “ நீங்கள் இப்போது கிம் ஜாங் அன்னிடம் தொலைபேசியில் நேரடியாக பேசுவீர்களா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ நிச்சயமாக பேசத்தயார். பேச்சு வார்த்தையில் எப்போதுமே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். தற்போது அவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பேச்சு நடந்த முன்வந்துள்ளனர். இது மிகப்பெரிய தொடக்கம். நமக்கு இதில் தொடர்பு இல்லை என்று சொன்னால், அவர்கள் இப்போது குளிர்கால ஒலிம்பிக் பற்றி பேச மாட்டார்கள். நான் குழப்பத்தில் இல்லை என்பதை அவர் அறிவார்” என பதில் அளித்தார்.

மேலும், “வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுடன் கலந்து பேசி நல்லதொரு அமைதித் தீர்வினை காண வேண்டும். இன்னும் பலருடன் கலந்து பேச வேண்டும். இதில் நல்லது நடந்தால் அது ஒட்டுமொத்த மனித இனத்துக்கே மிகப்பெரிய செயலாக அமையும்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

Leave a comment