மெக்சிகோ: கடற்கரை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி

223 0

மெக்சிகோவில் உள்ள பிரபல கடற்கரை விடுதியில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் அகபுல்கோ நகரில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரை விடுதியில் ஞாயிறு விடுமுறையையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டுள்ளனர். அப்போது சிலர் அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் தீவிரமடைந்ததையடுத்து அவர்கள் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 உள்ளூர் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து ராணுவத்தினர் மற்றும் போலீசார் நகருக்குள் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை சரணடையுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால் அவர்கள் சரணடைய மறுத்ததையடுத்து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் உள்ளூர் காவல்துறையை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து 30 உள்ளூர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment