பஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து மத்திய தொழிற் சங்கங்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றன. மத்திய அரசின் அனைத்து துறை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் பஸ் தொழிலாளர்கள் போராட்டம் நீடித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை பேசி முடிவுக்கு கொண்டு வர அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
பஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மாநில செயற் குழு உறுப்பினர் செல்வசிங் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள் பாக்கியம், சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட தலைவர் பாக்கியம் கூறியதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு கொடுக்க வேண்டிய ரூ.7 ஆயிரம் கோடியை உடனே திருப்பி கொடுக்க வேண்டும். இந்த பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் விரைவாக முடிக்க வேண்டும். பொது மக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.தொழிலாளர்களை இழுத்தடிக்காமல் சுமூக தீர்வு காண வேண்டும் என்றார்.
பஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து மத்திய தொழிற் சங்கங்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றன. மத்திய அரசின் அனைத்து துறை ஊழியர்களும் பாரிமுனையில் இன்று மாலையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர். வங்கி ஊழியர்களும் இதில் திரளாக பங்கேற்கிறார்கள்.