மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்.பி. மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை மக்களுக்கு வெ ளிப்படுத்தப்படவில்லை. அந்த அறிக்கை மக்களுக்கு வெ ளிப்படுத்தப்பட்ட பின்னர் நாம் அது தொடர்பில் தீர்மானம் எடுப்போம்.
விசேடமாக இந்த அறிக்கையை உடனடியாக பகிரங்கப்படுத்துமாறு நாம் கோரியிருக்கிறோம். அதன்படி விரைந்து இந்த அறிக்கை வெ ளியிடப்படும் என நம்புகிறோம். அந்த அறிக்கை வெ ளியிடப்பட்டதும் அது தொடர்பில் ஆராய்ந்துவிட்டு அதனை மக்களுக்கு வெ ளிப்படுத்துவோம்.
மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்றைய தினம் கூடவுள்ள கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படும் என்றார்