மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விசாரிக்கும் நோக்கில் பாராளுமன்றம் எதிர்வரும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கூட்டப்படும் என தெரியவருகிறது.
விசேட பாராளுமன்ற அமர்வைக் கூட்டி இது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடத்தவிருக்கிறார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றில் நடைபெறவுள்ள இந்தக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்துக் கட்சிகளினதும் செயலாளர்களுக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
அதன்படி நாளை மறுதினம் நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விசேட பாராளுமன்ற அமர்வை நடத்தி அதில் பிணைமுறி விவகாரம் குறித்த விவாதத்தை நடத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை அல்லது வெ ள்ளிக்கிழமை தினத்தில் இந்த விசேட பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகிறது.