தேர்தல் சட்ட திட்­டங்­களை மீறி­யமை தொடர்பில் 24 மணிநேரத்தில் 11 பேர் கைது!

503 0

தேர்தல் சட்ட திட்­டங்­களை மீறி­யமை தொடர்பில்  நேற்றுக் காலை 6.00 மணி­யுடன் நிறை­வ­டைந்த 24 மணி நேரத்தில் 11 பேரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். குறித்த காலப்­ப­கு­திக்குள் பொலிஸார் முன்­னெ­டுத்த 6 சுற்றிவளைப்­புக்­களில், 5 நட­வ­டிக்­கை­களின் போது இந்த 11 பேரும் கைது செய்­யப்பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குன­சே­கர தெரி­வித்தார்.

கட்டான பொலிஸ் பிரிவில் 3 பேரும்,  பல்­லே­கலை பொலி­ஸாரால் மூவரும்,  கண்டி பொலி­ஸாரால் ஒரு­வரும், வரக்­கா­பொல பொலி­ஸாரால் மூவரும், கொச்­சி­கடை பொலி­ஸாரால் ஒரு­வ­ரு­மாக இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இத­னி­டையே இந்த 24 மணி நேரத்தில் பொலி­சா­ருக்கு தேர்­தல்கள் தொடர்பில் 8 முறைப்­பா­டு­களும் கிடைக்கப் பெற்­றுள்­ளன.

கடந்த 2017 டிசம்பர் 9 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்ய ஆரம்­பிக்­கப்­பட்ட தினம் முதல் இது­வரை மொத்­த­மாக தேர்­தல்கள் தொடர்பில் 124 பேர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பதி­வா­கி­யுள்ள சுற்­றி­வ­ளைப்­புக்கள் 35, முறைப்­பா­டுகள் 68 உள்­ளிட்ட 103 சம்­ப­வங்கள் தொடர்பில் இந்த 124 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

மேலும் பல சந்­தேக நபர்­களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a comment