இரு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்

241 0

பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி. முனசிங்கவும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தஸநாயக்கவுமே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர்.

விஷேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பீ முனசிங்க, சப்ரகமுவ மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் தகவல் தொழில் நுட்ப பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தஸநாயக்க விஷேட பாதுகாப்பு பிரிவுக்கும் இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ் ஆணைக் குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக் குழுவின் அனுமதியின் பிரகாரம் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment