முன்னாள் அமைச்சர் லலித் அதுலத்முதலி மற்றும் ஶ்ரீமதி அதுலத்முதலி ஆகியோரின் புதல்வியான சரலா அதுலத்முதலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இதன்போது அவர், ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இதேவேளை, பொதுஜன முன்னணி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த நால்வர் நேற்று ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
இதற்கமைய, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அனைத்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே இவ்வாறு சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.