2020ம் ஆண்டளவில் மீன் ஏற்றுமதியில் இலங்கையை மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றுவது எமது இலக்காகும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை மீன் ஏற்றுமதி துறையில் 11வது இடத்தில் உள்ளது என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கமைய, கடற்றொழில் துறையின் வளர்ச்சியை தொடர்ந்தும் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார்.