நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன் ரணில் இராஜினாமா செய்ய வேண்டும்-சீ.பி.ரத்நாயக்க

234 0

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முன்னர், அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், பிணை முறி மோசடி சம்பவத்தில் இருந்து பிரதமர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment