உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு லெட்வியா ஜனாதிபதி ரேய்மொன்ட் வெஜொய்ன்ஸ் இலங்கை வந்துள்ளார்.
இவர் நேற்று (06) மாலை இத்திஹாத் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.வை. 264 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதி ரேய்மொன்டுடன் அவரது மனைவி உட்பட நான்கு பேர் வருகை தந்துள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனவும் கூறப்படுகின்றது.