ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தை பயன்படுத்துவதில்லையென தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ ல.சு.க. அறிவித்துள்ளது.
கட்சியின் பிரச்சாரத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் ஸ்தாபகர்கள் ஆகியோரின் புகைப்படங்களையே பயன்படுத்துவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைவர்களின் புகைப்படங்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதனால் எந்தவித இலாபமும் கிடையாது எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.