கட்சிக்கு உழைக்காத அமைப்பாளர்கள் ஜனாதிபதியின் வாளுக்கு இரை

231 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தொகுதியை வெற்றிபெறச் செய்ய முடியாத அமைப்பாளர்கள் ஜனாதிபதியின் வாளுக்கு இரையாவார்கள்  என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை அடுத்து வரக்கூடிய மாகாண சபைத் தேர்தலுக்காக புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ள ஆலோசனையின் கீழ் சகல தொகுதி அமைப்பாளர்களும் மாவட்ட அமைப்பாளர்களும் பொது மக்களிடம் நேரடியாகச் சென்று கட்சியின் வெற்றிக்கு உழைக்க தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என கட்சி எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment