சைட்டம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்வு குறித்து இன்று ஆய்வு

252 0

சைட்டம் பிரச்சினைக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வு குறித்து ஆராய்வதற்கு அரச மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் இன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய கூட்டத்தின் போது காத்திரமான ஒரு முடிவை அரசாங்கத்துக்கு அறிவிக்கவுள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிமல் கருணாசிறி அறிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வு யோசனை இலவசக் கல்விக்கு மேலும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கமும் அரசாங்கத்தின் மூடிமறைக்கும் தீர்வுகளுக்கு செவிசாய்க்கத் தயாரில்லையென குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதிக்கப் போவதைக் கருத்தில் கொண்டு தீர்வை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அச்சங்கங்கள் அரசாங்கத்துக்கு சிவப்பு சமிக்ஞை வழங்கியுள்ளன.

Leave a comment