முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பொய்யெனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளருமான எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை பொய்யானது என எந்தவொருவருக்கும் விமர்சிக்க முடியும். இருப்பினும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக் கொள்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.