பாடசாலை செல்லும் 17 வயது மாணவியொருவரை காலித்து அடிக்கடி துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் மினுவாங்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் தனது கைத் தொலைபேசியில் மாணவியின் நிருவாண புகைப்படத்தை வைத்துக் கொண்டு இணையத்தளத்தில் போடுவதாக மிரட்டல் விடுத்தே இவ்வாறு துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
திவுலபிட்டிய, ஹபுவலான பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.