அகதிக்கு ஆதரவளித்தவருக்கு வழக்கு

340 0

Evening-Tamil-News-Paper_35134088994இலங்கை அகதி ஒருவருக்கு ஆதரவாக வானூர்தியில் போராட்டம் நடத்திய அவுஸ்திரேலியாவின் அகதிகள் செயற்பாட்டாளர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து டார்வின் நோக்கி நாடுகடத்தப்பட்டார்.

இதன்போது ஜெஸ்மின் பிப்ரோ என்ற அவுஸ்திரேலிய அகதிகள் செயற்பாட்டாளர் குறித்த வானுர்தியில் ஏறியதுடன், ஆசனத்தில் அமர மறுத்து எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை அவதானித்த மேலும் இரு பயணிகள் அவருடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனை அடுத்து குறித்த அகதி நாடு கடத்தப்படுவது தவிர்க்கப்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஜெஸ்மின் பிப்ரோவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.