இலங்கைக்கான மொரிஸியஸ் நாட்டின் முன்னாள் தூதுவரும், பிரபல தொழிலதிபரும், கம்பன் கழக முன்னாள் தலைவருமான தேசபந்து தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரன் நேற்று காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 76 வயது. சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் இறைபாதம் அடைந்துள்ளார்.
இவர் பிரபல சமய, சமூக சேவையாளராவார். கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் அறங்காவலராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது பூதவுடல் இலக்கம் 133, புதுச் செட்டித்தெரு, கொழும்பு 13 என்ற முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள் கொழும்பில் நாளை திங்கட்கிழமை மாலை இடம்பெறும்.