ஆப்ரிக்காவின் செனகல் நாட்டில் அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் குழு நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியானதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள செனகல் நாட்டில் அரசுக்கு எதிராக எம்.எப்.டி.சி எனும் கிளர்ச்சிக்குழு செயல்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிவரும் இந்த குழு, கசாமன்ஸ் எனும் இடத்தில் சில நாட்களுக்கு முன்னர் மரம் சேகரித்துள்ளனர்.
இதனை, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் எதிர்த்ததால் அவர்களை துப்பாகியால் சுட்டுக்கொன்றுள்ளனர். 13 பேரின் உடல்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கிளர்ச்சிக்குழுவில் உள்ள இருவர் சந்தேக வளையத்தில் கொண்டு வந்துள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடம் பிரபல சுற்றுலாத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.