தபால் சேவை ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான விஷேட கலந்துரையால்!

389 0

தபால் சேவை ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் திங்கள் இடம்பெறவுள்ளது. 

அரசாங்க நிர்வாக சேவைகள் அமைச்சில் இக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 10ம் திகதி, தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில், இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், வேலைநிறுத்தம் தொடர்பான இறுதி முடிவு, திங்கட்கிழமை இடம்பெறும் கலந்துரையாடலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என, தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் எச்.கே.காரியவாசம் தெரிவித்துள்ளார்.

Leave a comment