முதன்மை விநியோகஸ்தராக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட முடியாதவாறு பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனத்துக்கு (Perpetual Treasuries Ltd) இலங்கை மத்திய வங்கி விதித்திருந்த தடை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 05 ஆம் திகதி முதல் பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனத்திற்கான தடை மேலும் நீடிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.