
சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியை அச்சுறுத்தியதாக கூறி, மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வல நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும் பிரதேசத்தில் உள்ள இளைஞர் ஒருவரின் பிரச்சினை சம்பந்தமாக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தான் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் தாக்கப்பட்டதாக மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வல கூறினார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.